தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!

0

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 9 மணி முதல் ஆளுநர் மாளிகையின் திறந்த புல்வெளியில் குறைந்த விருந்தினர்களுடன் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகின்றது.

முதலமைச்சராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.