தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு

0

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இணையவழி மூலமாக உச்சி மாநாடொன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தியிருந்தார்.

இதன்போது, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடி இலங்கைக்கு விடுத்த அழைப்பை வரவேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.