தமிழர்களை அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் – கலையரசன்

0

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களை இன்னொரு சமூகம் அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

33 வருடங்களாக இயங்கி வரும் வடக்கு பிரதேச செயலகத்தினை முழுமையாக இயங்க முடியாது தடுத்து நிறுத்தக்கூடிய சில விடயங்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான செயல் மன வேதனையை ஏற்படுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.