தமிழ் தேசியக் கட்சி சார்பில் ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவுகூரல் நிகழ்வு

0

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழ் தேசியக் கட்சி சார்பில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரசாரச் செயலாளர் ஜெ.ஜனார்த்தனன் உட்பட கட்சியின் பிரமுகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்துகொண்டனர்.