தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை கிடைக்கும் வரையில் போராடுவேன் – சாணக்கியன்

0

தந்தை செல்வாவின் தமிழ் மக்களுக்கான போராட்டத்தினை மூன்றாவது தலைமுறையாகவும் முன்கொண்டுசெல்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தந்தை செல்வாவின் 44ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நினழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை கிடைக்கும் வரையில் தமிழ் மக்களின் உரிமைக்காக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இளைஞராகவும் தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.