தரம் 1 மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பது, பிற்போடப்பட்டுள்ளது

0

தரம் 1 க்கான மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பித்தல் எதிர்வரும் பெப்ரவரி இரண்டாம் வாரம் வரை பிற்போடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சில பிரதான பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு உள்ளீர்க்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் இன்னமும் காட்சிப்படுத்தாமை மற்றும் கடந்த வருடத்தில் முடிக்காத பாடங்களை மீட்டுகவதற்கு காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளமை முதலானவற்றின் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடங்களில் தரம் 1 மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஜனவரி இரண்டாம் வாரங்களில் ஆரம்பமாகின.