தற்போது பரவும் கொரோனா வைரஸ் முன்னரை விட வீரியமானது

0

நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ், முன்னர் பரவியதை விட வித்தியாசமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் வீரியமானது என்பதால், தொற்று பரவலின் வேகம் அதிகரிக்குமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, பேலியகொடை மீன் சந்தை மற்றும் பேருவளை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.