தலையணை சண்டையை தவிர்க்குமாறு கோரிக்கை

0

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கருத்திற்கொண்டு, தலையணை சண்டை, கயிறிழுத்தல் போன்ற புத்தாண்டு விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்ககுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சூசி பெரேரா தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறான பெரிய அளவில் மக்கள் செல்லும் கூட்டங்களை தவிர்த்து வீட்டில் இருந்தே தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவக்கூடிய கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விளையாட்டு அல்லது எந்தவிதமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவேண்டாம் என்றும் சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.