தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு – விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

0

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சில கட்டுப்பாட்டுகளுடன் தளர்த்துவதற்கு கோவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. 

அதேவேளை பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதும் கூட மீண்டும் ஜுன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஜுன் 25 ஆம் திகதி அதிகாலை வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த டெல்டா வகை கோவிட் வைரஸால் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடையும் அச்சுறுத்தல் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.