தவிசாளருக்குக் கொரோனா – பசிலின் கூட்டத்தினால் பலருக்கும் சிக்கல்

0

அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி இவருக்குப் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவர் வெளியில் பல இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இம்மாதம் 18ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்விலும் இவர் கலந்துக்கொண்டிருந்தார். 

கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர் செயற்பட்டிருப்பதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.