தாய் முன்னிலையில் மகளைப் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில் இருவர் கைது!

0

சென்னையில் கடந்த 12 ஆம் திகதி 22 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாயார் முன்னிலையில் மூவர்  கத்திமுனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குற்றவாளிகளான  லிங்கன், ஆனந்த், ராஜ் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லையென மகளிர் அமைப்பினரும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  ஆனந்த் மற்றும் ராஜ்குமார்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான  லிங்கனைத்   தேடி வருவதாக தமிழகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.