அரியாலை ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தாவடியில் இனங்காணப்பட்ட முதல் கொரோனா நோயாளியுடன் நெருக்கமாகவிருந்த குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான முடிவுகள் இன்று கிடைக்கும் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.