திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ம் கட்டை, அலஸ்தோட்டம், துவரங்காடு,கன்னியா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
திருகோணாமலை, நிலாவெளி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்ததால் அவ்வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
பல வீடுகளுக்குள் வெள்ளம் உட்புகுந்ததால், அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.