திருகோணமலையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

0

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.