திருகோணமலையில் புராதன விகாரைகளை தேடும் படையினர்!

0

திருகோணமலை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான புராதன விகாரைகள் மற்றும் தொல்பொருள் தடயங்கள் காணப்படும் இடங்களை முப்படையினர் தேடிவருவதாகத் தெரியவருகின்றது.

மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ கல்சியம்பலா கந்த என்ற இடத்துக்கு அருகில் புராதன விகாரை ஒன்று சேதமடைந்த நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆனாலும் அப்பகுதிக்குச் செல்வதற்குப் பாதை இல்லை எனவும் புராதன விகாரை சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இவ்விடத்தைப் பார்வையிடுவதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களை முப்படையினர் தேடி வருவதையும் புராதன இடங்களை இனங்கண்டு வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.