திருகோணமலையில் 60 கொவிட் தொற்றாளர்கள்

0

திருகோணமலை நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இதுவரை 60 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை நகரில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் கடந்த தினம் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த திங்கட் கிழமை நகரின் விற்பனை நிலையங்களை அண்மித்த பகுதியில் 353 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதேபோல், பதுளை, பதுலுபிடிய பிரதேசத்தில் 190 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பதுளை பொலிஸ் நிலையத்தில் பயிற்சிக்கு வந்த 8 அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.