திருமணத்திற்கு வந்த கொரோனா நோயாளி – புதுமண தம்பதி உட்பட 50 பேர் தனிமைப்படுத்தல்

0

பண்டாரகம கம்மன்பில பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கலந்து கொண்டமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் புதிதாக திருமணம் செய்த தம்பதி உட்பட அதில் கலந்து கொண்ட குடும்பத்தினர் நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி நிமேஷா ரத்னவீர,

இந்த திருமண நிகழ்வில் சுகாதார ஆலோசனைக்கமையவே இடம்பெற்றுள்ளது. இதில் 40 – 50 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய புதுமண தம்பதி உட்பட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மணமகனின் மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த சகோதரனுக்கே இவ்வாறு கொரோனா தொற்றிமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.