திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்கு கொரோனா -13 மருத்துவர்கள் உட்பட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தலில்

0

குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த வைத்தியசாலையின் 13 வைத்தியர்கள் உள்ளிட்ட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதியாகியுள்ள நிலையில், கடந்த 15ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால், இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.