திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம் – தகவல் வெளியானது!

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே பங்கேற்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.