திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது

0

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நடத்துவதற்கான தடையுத்தரவை நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தடைகளை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.