தியாகி திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்ட படங்கள் மற்றும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு யாழ் பொலிஸ் நிலைய பொலிசாரால் அவை அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று காலை முதல் நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை பொதுமக்கள் யாரும் நெருங்க பொலிசார் அனுமதிக்கவில்லை.
இன்று காலையில் ஊடகவியலாளர்கள் அந்த பகுதிக்கு சென்ற போது, புகைப்படம் எடுக்கவும் பொலிசார் அனுமதிக்கவில்லை. எனினும், தற்போது அந்த பகுதியில் ஊடகவியலாளர்கள் படம் பிடித்துள்ளனர்.