திலீபனின் நினைவேந்தல் நடாத்தப்போவதாக கூறி மட்டக்களப்பில் சில ஆலயங்களுக்கும் நாடாளுமன்ற, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தீலிபனை மட்டக்களப்பு நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நினைவுகூரமுடியாது என்ற தடையுத்தரவு நேற்று(வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடாத்துவதற்கு எதிரான தடையுத்தரவு நேற்று இரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.
கல்லடியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கும் கொக்கட்டிச்சோலையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடாத்தமுடியாது என்ற தடையுத்தரவு நீதிமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டு பொலிஸாரினால் கையளிக்கப்பட்டுள்ளது.