தீவிரமடையும் கோவிட் தொற்று – விசேட கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்படவுள்ள அதிவிசேட வர்த்தமானி

0

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் விசேட கட்டுப்பாடுகளுடன் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விசேட சுகாதார கட்டுப்பாடுகள் கொண்ட குறித்த அதிவிசேட வர்த்தமானியை இந்த வாரம் வெளியிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுடன் கூடிய இந்த புதிய வர்த்தமானியை வெளியிட சகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.