துறைநீலாவணை மக்களின் இரவு நேர நடமாட்டத்திற்க்கு அச்சுறுத்தல்.

0

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்திற்க்கு நுழையும்  பிரதான வீதியில் இரவு நேரத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதனால் வீதியால் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு ஆபத்து.

மட்டக்களப்பு கல்முனை வீதியிலிருந்து நீலாவனை சந்தியிலிருந்து மேற்கு பக்கமாக துறைநீலாவணைக்கு செல்லும் சுமார் இரண்டரை கிலோ மீற்றர் வீதியின் இருமருங்கிலும் குளம் உள்ளது, மட்டக்களப்பு வாவியிலிருந்து மருதமுனைக்கு பின்னால் உள்ள குளத்திற்க்கு  குளத்தில் கொட்டப்படும் கோழி ,ஆடு மற்றும் மாட்டிறைச்சி கழிவுகளை உண்பதற்க்காக வீதியை இரவுநேரத்திலேதான் முதலைகள்  குறுக்கறுத்து செல்கின்றன.

துறைநீலாவணை வீதியிலும் அண்மைக்காலத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன இவற்றினால் கூட மக்களுக்கு ஆபத்து நேர வாய்ப்புண்டு.

இரண்டு பெரும் முதலைகள் குட்டிகளுடன் தொடர்ச்சியாக இரவு நேரத்தில்  நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.