துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

0

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

விஜேராமவில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று(திங்கட்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் துறைமுக தொழிற்சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.