தூர சேவை பஸ் ஊழியர்களுக்காக கொழும்பில் ஓய்வு அறை

0

தூர சேவை பஸ் ஊழியர்களுக்காக கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் ஓய்வு அறையை நிர்மாணிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டார்.

தூர சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் உரிய முறையில் ஓய்வெடுக்காமையால் விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அவர்களின் ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு உரிய இடம் இல்லை எனவும் நிலான் மிரண்டா தெரிவித்தார்.