தென்னிலங்கையில் 6000 பேர் பணியாற்றும் தொழிற்சாலையில் கொரோனா தொற்று

0

ஹொரன குருகொட பிரதேசத்திலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் தெரிவு செய்யப்பட்ட 30 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் 6000க்கும் அதிகமான ஊழியர்கள் பயணியாற்றுகின்றனர். இதன் காரணமாக அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்த பெண்ணுக்கு எந்த விதமான அறிகுறிகளும் காணப்படவில்லை என களுத்துறை பிரதேச சுகாதார சேவை இயக்குனர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அவருடன் நெருங்கி செயற்பட்ட 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் PCR பரிசோதனை மேற்காள்ளப்பட்டதாக அவர் குறிப்பிடடுள்ளார். அதன் முடிவுகள் நாளைய தினம் கிடைக்கவுள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார்.

குறித்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முறை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் பேலியகொட மீன் சந்தை அல்லது மினுவாங்கொட பரவல்களுடன் தொடர்புபடாதவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.