தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!

0

கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான நிறுவங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தேமிய அபேவிக்கிரம தெரிவித்தார்.

இம்மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்பட்டன போதும் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு இதற்கு முன்னர் விதித்திருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்தியா மற்றும் வியட்நாம் பயணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.