தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 6 இராணுவ வீரர்கள் காயம்

0

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தெற்கு  அதிவேக  நெடுஞ்சாலையில் பின்னதுவ நுழைவாயிலுக்கருகில் நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினரின் கெப் வாகனமொன்று மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்தின் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வீதியில் உருண்டு சென்றுள்ளது.

இதன் போது சாரதி உட்பட ஆறு இராணுவத்தினர் வாகனத்தில் பயணித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களுக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.