முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது