தேசிய அடையாள அட்டை இலக்க முறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது!

0

தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும்.

அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.