தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பரிந்துரை!

0

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது.

தற்போது நாட்டில் 345 தேசிய பாடசாலைகள் உள்ளதாக செயலணியின் உறுப்பினரான கலாநிதி சுனில் ஜயரத்ன நவரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு தேசிய பாடசாலையேனும் இல்லாதுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.