நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணாக உள்ளதெனத் தெரிவித்து, அந்த வர்த்தமானியை அதிகாரமற்றதாக அறிவிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் பல, பிரதமர நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று (11) ஆராயப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துரைராஜா, முர்து பெர்ணான்டோ ஆகியோராலேயே, இந்த மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன.
சட்டத்தரணி சரித்த குணரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவபடுத்தியும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களால், இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.