வத்தளை – ஹேகித்த வீதியில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை வத்தளை பொலிஸாரினால் குறித்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூதூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அடையாள அட்டை இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களான தம்பதி என்ன காரணத்திற்காக கொழும்பிற்கு வந்தார்கள் என வெளிப்படுத்த தவறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அரச புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் தங்கள் பையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் வேறு முச்சக்கர வண்டியில் வந்த நபர் தங்களை வத்தளை பிரதேசத்தில் விட்டு சென்றுள்ளதாக இந்த தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தம்பதி தொடர்பில் தகவல்களை உறுதி செய்வதற்காக மூதூர் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.