சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக பொது மக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது பொதுச் செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
எனினும் கோவிட் வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் இன்னும் உள்ளது.
எனவே வைரஸ் பரவாமல் இருக்க சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.