தொடரும் பயணக்கட்டுப்பாடு – ஒருவேளை உணவின்றித்தவிக்கும் உறவுகள்!

0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 9ஆம் மாதம் முதல் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு  வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பணம் கிடைக்காமையால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக்காரணமாக ஒருவேளை உணவின்றி வீட்டில்  எவரது உதவியும்மின்றி தனித்து வசித்துவருபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிடப்படுகிறது.

சமூர்த்தி பணத்தினை தற்பொழுதாவது, விரைந்து வழங்கப்பட்டால் உதவியாக அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டுமேன பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.