தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கான அறிவித்தல்!

0

தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை குறித்த விற்பனை நிலையங்களை திறந்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2ஆம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்திற்கு  இரு முறை மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.