தொடர்ந்தும் முகக் கவசம் அணிவதால் ஏற்படும் ஆபத்து

0

நீண்ட காலமாக முகக் கவசம் அணிவதனால் முகத்தில் தோல் நோய் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அது தொடர்பான விசேட வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்துள்ளார்.

எப்போது அடர்த்தியான நிறங்களில் உள்ள முகக் கவசம் அணியாமல் வெளிர் நிறங்களில் உள்ள முகக் கவசங்களை அணிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்மூலம் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் முகக் கவசம் அணியும் போது முகத்தில் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு செல்லுமாறு வைத்தியர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.