தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று – இவர்கள் மாத்திரம் தான் பங்கேற்க முடியுமாம்!

0

ஊரடங்கு வேளையில் பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர்களிற்கு மாத்திரம் ஆறுமுகன் தொண்டமானின் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இன்றைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களினதும் வாகனங்களினதும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு பொலிஸ்நிலையங்களிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துமாறு குறிப்பிட்ட அதிகாரிகளிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.