தொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த!

0

தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இந்த வியடத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் அவர் காலமாகுவதற்கு முன்னதாகத் தன்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பிரதமர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களிற்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும், ஈ.பி.எவ் கொடுப்பனவு பற்றி பேசினார். இதை பேசி சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரது இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.