கடந்த வாரங்களில் பதிவான கொரோனா தொற்று உறுதியான 2100 பேரில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் காட்டவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, இலங்கையில் கொரோனா தொற்றின் முதல் அலைகளை விட தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது என எச்சரித்தார்.
அத்தோடு கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளை அறிகுறியற்ற நோயாளிகள், சிறிய அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் என வகைப்படுத்தடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆகவே மேற்கண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டால், அதிகாரிகள் மூன்று நிலை சிகிச்சையை மட்டுமே நிர்வகிக்க வேண்டியிருக்கும் என்றும் வைத்தியசாலை இடவசதிகள் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் டொக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.