தொலைபேசி எண்ணை மாற்றத் தேவையில்லை – விரும்பிய வலையமைப்பை மாற்றலாம்: வருகிறது அட்டகாச வசதி!

0

பாவனையாளர்கள் தற்போது உபயோகிக்கும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாமலேயே, விரும்பிய தொலைபேசி சேவை வழங்குனர்களை மாற்றிக்கொள்ளும் புதிய நடைறை குறித்து இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விவாதித்து வருகின்றது.

சிம் கார்டை மாற்றத் தேவையில்லாமல், நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த வசதி பல வெளிநாடுகளில் வழங்கப்படுகிறது. இதன்படி, அனைத்து வலையமைப்பிற்கான கட்டணத்தையும் சம அளவாக பேணுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கையடக்க தொலைபேச, நிலையான தொலைபேசி இணைப்புக்கள் இரண்டிற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக சேவை வழங்குநர்களுடனும் கலந்துரையாடலை நடத்துவதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடுத்த வாரத்திற்குள் ஊடகங்களுக்கு வெளிப்படும் என்று மேலும் கூறியுள்ளது.