தொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

0

தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்படாத போதே மர்மம் தோன்றப்போகின்றது என்பதை உணர்ந்து கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பேராசிரியர் பத்மநாதன் , கலாநிதி சிவகணேசன், பேராசிரிய மௌனகுரு போன்றோர் இக்குழுவில் சேர்க்கப்படாதது ஏன் எனவும் தமிழ்உணர்வாளர்கள் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழர்கள் நிலங்களையும் அவர்களின் இருப்புக்களையும் அழித்தொழிக்கும் செயற்பாடே இந்த செயலணியின் நோக்கமாகும் எனவும் தமிழ் உணர்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.