த.தே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் – சரத்வீரசேகர

0

யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் நாட்டில் தடை செய்ய வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

நளின் பண்டார எம்.பி 

நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டை முன்னோக்கிச் கொண்டுச் செல்ல முடியும். அவ்வாறிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டுமென கூறுவதை ஏற்கமுடியாது  என்றார்.

சால்ஸ் நிர்மலநாதன் எம்.பி 

அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டிக்கிறோம். ஹிட்லர் போன்று மஹிந்த செயற்பட்டிருந்தால் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களை ஒழித்திருக்க வேண்டும் என கூறிய கருத்து பாரதூரமானது. எனவே, அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு நிரந்தர தீர்வு வழங்குங்கள்.

அமைச்சர் சரத்வீரசேகர

பிரிவினைவாத கருத்துக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர் ஆகவே நான் அவ்வாறு கூறினேன்.