நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் – நகர அபிவிருத்தி அதிகார சபை

0

நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற குடிசைவாசிகளுக்கும் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 40,000 நகர்ப்புற குடிசைவாசிகளில் 23,000 பேருக்கு தற்போது வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

ஏனையோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.