நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் அனைத்தும் நிறுத்தம்

0

இவ்வருட நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய பங்குச்சபைகளுக்கும் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு திருப்பலியின் பின்னர் வவுனியா ஆலய மக்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோய் தொற்றுக்காரணமாகவும் நோயினர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவும் அவர்களுக்காக பிரார்த்திக்கும் நோக்குடன் இவ்வருடத்தில் களியாட்ட நிகழ்வுகள் கரோல், ஒளிவிழா என்பனவும் கிறிஸ்மஸ் நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் என்பன ஆயரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நத்தார் தினத்தன்று காலை 7.30 மணிக்கு திருப்பலி சமூக இடைவெளிகளையும் சுகாதாரமுறைகளை பின்பற்றியும் ஆலயங்களில் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.