நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிடுவோம் என அஞ்சவேண்டாம் – ரணில்

0

நாடாளுமன்றத்தை கூட்டினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துவிடுவோமென்று அஞ்ச வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு பதிலாக கொரோனா வைரஸிற்கு எதிராகவே கொண்டுவருவோம் என கூறினார்.

இருப்பினும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும்தரப்பு உறுப்பினர்கள் பலர் எதிர்த்துடன் நாடாளுமன்றத்தை கூட்டினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிடுவார்கள் என்ற கருத்தினையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அரசியல் பேதங்களை மறந்து கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டையும் மக்களையும் காக்க ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.