நயன்தாராவுக்கு கொரோனா ?

0

கொரோனா அச்சத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மறைந்த பாடகர் ஏ.எல்.ராகவன், முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவருக்கு கொரோனாதொற்று பாதிப்பு இருந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது மனைவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்த பிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் பதிவிட்ட, வாட்ஸ்- ஆப் பதிவில், நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதித்து, பல லட்சம் ரூபாய் செலவழித்து, சிகிச்சை பெறுகின்றனர்.

இல்லாதவர்களின் நிலை சிரமமாக உள்ளது. அதனால், அனைவரும் பாதுகாப்போடு இருங்கள். கொரோனாவை விட, தனிமையே நம்மை கொன்று விடும் என, கூறியிருந்தார்.

இந்நிலையில், நயன்தாராவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.