நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என என்கின்றார் சம்பந்தன்

0

இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டும் என்றால் இந்த நாடு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஒரு அரசியல்த் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்த அவர், அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வது சாதாரண விடயம் இல்லை என்றும் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை அடைவதில் உறுதியாக இருந்தால் அதனை அடைந்தே தீருவோம் என்றும் கூறியுள்ளார்.

அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என ராஜபக்ஷ கடந்த காலத்தில் செயற்படவில்லை என்றும் ஆனால் தற்போது நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசியல் தீர்வை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் உறுதியாக நிற்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த இரா.சம்பந்தன் தமிழ் மக்களால் நன்கு விரும்பப்படும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு வரைத் தான் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம்ம என கூறினார்.