நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

0

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.